Fadir Store

Fadir Store - With a passion for forging and crafting metal works of art.

We bring entertaining videos about metallurgical company.
- We make a wide variety of tools, hardware and artwork - all kinds of knives and axes, kitchen tools, fire pits and more.

10/21/2021

Craft a hidden Bokuto knife from an old discarded Saw.

02/27/2021
சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்
02/27/2021

சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். தினந்தோறும் இரண்டு சப்போட்ட....

ஏலக்காய் அதிரவைக்கும் மருத்துவ நன்மைகள்
02/26/2021

ஏலக்காய் அதிரவைக்கும் மருத்துவ நன்மைகள்

ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்க.....

கொலஸ்ட்ரால் குறைய இந்த உணவு போதும்
02/26/2021

கொலஸ்ட்ரால் குறைய இந்த உணவு போதும்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட...

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
02/26/2021

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளரிக்காய் கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு காய் என்றால் அது வெள்ளரிக்காய். இதில் ப.....

 #மசாலா_பொடிகள் சிலவற்றை பார்ப்போம் #சாம்பார் பொடி... #தேவையானபொருட்கள்....மிளகாய் வத்தல் - 1/4 கிலோ, தனியா - 1/4 கிலோ, ...
02/26/2021

#மசாலா_பொடிகள் சிலவற்றை பார்ப்போம்

#சாம்பார் பொடி...

#தேவையானபொருட்கள்....
மிளகாய் வத்தல் - 1/4 கிலோ, தனியா - 1/4 கிலோ, சீரகம் - 100 கிராம், கடலைப்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், வெந்தயம் - 25 கிராம்

#செய்முறை...

மிளகாய் வத்தலை வெயிலில் 4 மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். மீதி பொருள்களை லேசாக வறுக்கவும்.வத்தல் காய்ந்ததும் எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மிசினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இது தான் எனது சாம்பார் பொடி....

#வத்தக்குழம்பு பொடி

#தேவையானபொருட்கள்...

மிளகாய் வத்தல் -100 கிராம்,மல்லி - 150 கிராம்,சீரகம் - 50 கிராம்,மிளகு - 25 கிராம்,கடலைப் பருப்பு - 25 கிராம்,வெந்தயம் - 25 கிராம்,கறிவேப்பிலை - 1 கப்

#செய்முறை....

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பை ஆப் பண்ணி விட்டு கடாயில் இருக்கும் சூட்டில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
சீரகத்தை வறுக்க தேவை இல்லை. அதை வறுத்த பொருள்களுடன் சேர்த்து கலந்து விட்டு அனைத்தையும் ஆற விடவும்.
ஆறிய பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். இது தான் வத்தக்குழம்பு பொடி....

#கரம் மசாலா பொடி

#தேவையானபொருட்கள்....
பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்,பட்டை - 10 கிராம்,கிராம்பு - 10 கிராம் ,அன்னாசிப்பூ - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்

#செய்முறை....

எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.
அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.இது தான் கரம் மசாலா பொடி....

#கொத்தமல்லி இலை பொடி

#தேவையானபொருட்கள்.....

கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

#குறிப்பு...
இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

#பஜ்ஜி போண்டா ரெடி மிக்ஸ்

#தேவையானபொருட்கள்....

கடலைப்பருப்பு - 500 கிராம், பச்சரிசி - 50 கிராம், மிளகாய் வற்றல் - 5, உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி - போண்டா ரெடி மிக்ஸ்.
பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
போண்டா என்றால்... நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

#லெமன் ரைஸ் லெமன் சேவை ரெடி மிக்ஸ்

#தேவையானபொருட்கள்.....

லெமன் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

#செய்முறை....

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை - இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்... லெமன் ரைஸ் - லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.
லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

#பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.....

#தேவையானபொருட்கள்
துவரம்பருப்பு - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4.

#செய்முறை....

துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.
தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து...
பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

#குறிப்பு.... கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

கோரைக்கிழங்கு மருத்துவ பயன்கள்
02/26/2021

கோரைக்கிழங்கு மருத்துவ பயன்கள்

கோரைக்கிழங்கு மருத்துவ பயன்கள் கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்....

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
02/25/2021

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளி பழம் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இரத்தக் ...

கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்…!!
02/25/2021

கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்…!!

கேரட் பச்சையாக சாப்பிடுவதால் நன்மைகள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்...

முள் சீத்தாப்பழத்தில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா…?
02/25/2021

முள் சீத்தாப்பழத்தில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா…?

முள் சீத்தாப்பழம் நம் நாட்டை பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகிறது. முள...

Address

Dallas, TX
75201

Alerts

Be the first to know and let us send you an email when Fadir Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fadir Store:

Share

Disclaimer

அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே.ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனை செய்கிறோம்.

உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை.

இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.