New Tech Construction & Engineering Pte Ltd

New Tech Construction & Engineering Pte Ltd Building construction such as curtain walls, window frames, door frames and skylight windows

என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று !!!
26/07/2024

என் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று !!!

அப்பா இல்லையெனில் இவ்வுலகமே மாயம்தான் ....அவர் அரவணைப்பில் அனைத்தும் நம் வசம் அந்த தெய்வம் கூட அவர் தோளில் ஏறித்தான் நான...
26/07/2024

அப்பா இல்லையெனில் இவ்வுலகமே மாயம்தான் ....
அவர் அரவணைப்பில் அனைத்தும் நம் வசம்
அந்த தெய்வம் கூட அவர் தோளில் ஏறித்தான்
நானே தெரிந்து கொண்டேன் ...

வாழ்வில் அனைத்துமே இன்பமானது அவர்
அருகில் நான் இருக்கும் வரை எவ்வளவு
வலியும் வேதனையும் மறைந்து போகும் மலர்ந்த
அவர் முகம் கண்டால் ...

உலகில் அனைத்து உறவுகளும் தம் தன கவலை
சொல்லி பரிமாறிக்கொள்ளும் தந்தை மட்டும்தான்
மனதாலத்தில் தான் படும் துன்பங்களை துயரங்களை
மறைத்து சிரித்தே நம் நலம் பேணுவார்...

கடைசி நிமிடம் வரை சுய நினைவை இழக்காமல்
அனைவரையும் நலம் விசாரிப்பார்கள் அவரவர்
விபரங்களை கேட்டு தெரிந்து கொண்ட தன்னலமற்ற
தெய்வத்தை தெய்வம் கொண்டது ஏனோ ...

அவரது அந்த ஆழமான கடைசி பார்வையில்
பேசாமலேயே ஆயிரம் விடயங்கள் தந்தார்
எல்லாரையும் நல்லா பாத்துக்க அம்மாவை
நல்லா பாத்துக்க அது அவரது ....

சத்தமற்ற மருத்துவமணையில் கடைசியாக
அவர் உச்சரித்த வார்த்தைகள் கண் கலங்கி
அவர் அழுத அந்த நொடிகள் இன்னும் என்
கண்களில் தோன்றித்த தோன்றி மறைகின்றது ...

என் தந்தை எனக்கொரு பிள்ளையான அந்த
கடைசி நாட்கள் அவரை பராமரிக்கும் அந்த
சில நாட்கள் என் வாழ்வில் அந்த இறைவன்
எனக்கு கொடுத்த அறிய வரம் ....

தந்தையே இவ்வுலகில் நான் இருக்கும்
நொடிகள் ஒவ்வொன்றும் தங்களை நினைத்து
நினைத்து சிலிர்க்க பல நினைவுகள் மனதில்
சுமந்து என் மனம் ஆற்றை துயரை ...

இங்கு இன்று எழுதி தீர்க்கிறேன் தீர்க்க
கூடிய விடயம் அல்ல அவை மனதோடு
வைத்து பெரும் நினைவாக போற்றரக்கூடிய
நினைவுகள் நீங்காமல் உங்கள் நினைவில் ...

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
தங்கள் அன்பு மகன்...

தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி .===========================உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள்.அப்பா எனும் உருவில் வந்த என்...
26/07/2024

தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி .
===========================

உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள்.

அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ.

ரூபமாய் என்னை பாதுகாத்த நீ
இப்போது அரூபமாய் என்னை சுற்றி
பாதுகாப்பு கவசமிட்டிருக்கிறாய் .

எப்படி வாழ்வேன் உன்னை பிரிந்து என
அரற்றிய என்னை
இது தான் வாழ்வின் நியதி என
உணர்த்த சென்று விட்டாய் .

இல்லாள் இல்லா இடம்
சொர்க்கமே இல்லை என்றுரைக்கும் நீ ,
நீ இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்ற
உன்னவளையும் அழைத்துக்கொண்டாய் .

மெய்யால் என்னை விட்டுச் சென்ற நீ
நினைவுகளில் என்னுள் உறைந்தே இருக்கின்றாய்
இனி ஒரு பிறவி ஒன்றிருந்தால்
மீண்டும் உன் வீட்டின் இளவரசியாய்
எனை ஈன்றிடும் வரம் வாங்கி வா எந்தையே ....

- நன்றி கவிதை ஆக்கம் சரஸ்வதி பாஸ்கரன்.

அப்பாவின் நினைவுகள் மெல்ல மெல்ல உணர்வுகளாக பரிமாணம் அடைந்து நினைவுகளை உணர்ச்சிகளாக உணரும் சந்தர்ப்பங்கள்  மகன்களுக்கு ஏற...
26/07/2024

அப்பாவின் நினைவுகள் மெல்ல மெல்ல உணர்வுகளாக பரிமாணம் அடைந்து நினைவுகளை உணர்ச்சிகளாக உணரும் சந்தர்ப்பங்கள் மகன்களுக்கு ஏற்படும். அது ஒரு அற்புத பரிமாண வளர்ச்சி.

என் தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...!!!அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும்நீராய் அப்பாவின்நினைவுகள...
26/07/2024

என் தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...!!!

அப்பாவின் ஈர நினைவுகள்....

வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..

ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

- நன்றி கவிஞர் நிழலி.

தாஞ்சூரின் ஏற்றமிகு அடையாளம், சிங்கையின் தமிழ்ச் சுரங்கம் என் தந்தையின் உடன் பிறவா உடன் பிறப்பை இந்த தரணியிழந்ததே !!!  ச...
16/07/2024

தாஞ்சூரின் ஏற்றமிகு அடையாளம், சிங்கையின் தமிழ்ச் சுரங்கம்
என் தந்தையின் உடன் பிறவா உடன் பிறப்பை இந்த
தரணியிழந்ததே !!! சித்தப்பா ...😭😭😭!!!

சித்தப்பாவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது
கண்ணீர் அஞ்சலி மற்றும் ஆழ்ந்த இரங்கல்கள்..!!!

சித்தப்பாவை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் மற்றும்
உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த
அனுதாபங்கள் சித்தப்பாவின் ஆன்மா
இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்கின்றேன்...🙏🙏🙏!!!

"A father is a daughter's first love, her forever hero.""Dad, you have always been my pillar of strength, my protector, ...
16/06/2024

"A father is a daughter's first love, her forever hero."

"Dad, you have always been my pillar of strength, my protector, and my best friend. I am forever grateful to have you in my life."

"Dad, you are the man who showed me how to be strong, independent, and fearless. Thank you for always believing in me."

Long Valley...
14/06/2024

Long Valley...

Yoga of Nature ...!!!
14/06/2024

Yoga of Nature ...!!!

White Blossom Tree ...!!!
14/06/2024

White Blossom Tree ...!!!

Amazing Nature ..!!😀😃
14/06/2024

Amazing Nature ..!!😀😃

Cute Dog♥♥♥ ....!!!
14/06/2024

Cute Dog♥♥♥ ....!!!

Address

24 CLIVE Street
Singapore
209780

Alerts

Be the first to know and let us send you an email when New Tech Construction & Engineering Pte Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share