Selundhthamizh Charitable Foundation

Selundhthamizh Charitable Foundation Selundhthamizh Charitable Foundation

03/12/2025
அனைவருக்கும் இனிய  வந்தனங்கள்.2025 /3/2 தேதி அன்று எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தைதேசிய ரீதியிலான பங்குதாரர் பட்டியலில்...
06/04/2025

அனைவருக்கும் இனிய வந்தனங்கள்.
2025 /3/2 தேதி அன்று எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தை
தேசிய ரீதியிலான பங்குதாரர் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான Ppppஅழைப்பிதழ் ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றது .
அது இறுதி கட்டத்தில் கிடைக்கப்பெற்றதன் காரணமாக செந்தமிழ் நற்பணி மன்றத்தின் செயலாளர் அவர்களிடம் அறிவித்ததை அடுத்து

எமது மன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக சரண் அதில் பங்கேற்று இருந்தார் .
இந்த நிகழ்வில் இலங்கையில் செயல்பாட்டில் இருக்கும் 315க்கும் மேற்பட்ட NGO நிறுவனங்கள் பங்கேற்று இருந்தனர்.
ஒரு நாள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பல்வேறு விடயங்கள் எங்களுக்கு இடையில் பகிரப்பட்டது.
அத்துடன் இதுவரை காலமும் வெளிநாடுகளில் இருந்து எம் நாட்டுக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான நிறுவனங்களின் அங்கத்துவர்களும் பங்கேற்று இருந்தார்கள்.அவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் என்பவற்றை தீர்ப்பதற்காகவும் எவ்வாறு எமக்கு அனுசரணைகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்கினார்கள்.
இதில் எமது மன்றம் சார்பாக சரண் கலந்து கொண்டது இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம் .அத்துடன் எம்மை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உதவி புரிந்த விருத்திஅமைப்புக்கு எமது மன்றம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி.
தலைவர்
மு. பிரஷானந்த்

சிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறுபொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரி...
14/01/2025

சிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறு

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.
அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.
இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது. இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.
புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.
புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்

Selundhthamizh Charitable Foundation book donation in Passara Muslim Maha Vidyalayam | Helping Hands SCF - 2024On 01.06....
20/06/2024

Selundhthamizh Charitable Foundation book donation in Passara Muslim Maha Vidyalayam | Helping Hands SCF - 2024

On 01.06.2024, as a part of the annual distribution of books to the students by our Selundhthamizh Charitable Foundation , Books were distributed to the students of Passara Muslim Maha Vidyalaya at the office of the school.

எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் அப்பியாச புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வின் ஒர் அங்கமாக 2024.06.01 ம் திகதி சனிக்கழமை பசறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் அப் பாடசாலையின் காரியாலயத்தில் எமது நற்பணி மன்றத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Sponsored by Mr. Pravinson thank you for your support
Specially thanks for Mr. Rifaz , Mr. Hendry Boss

மாணவர்கள் இழந்த பாடசாலைக் காலத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் மீளுருவாக்கல் பாடத்திட்டம் Channel NIE வழிய...
09/01/2024

மாணவர்கள் இழந்த பாடசாலைக் காலத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் மீளுருவாக்கல் பாடத்திட்டம் Channel NIE வழியாக Download செய்யலாம். (தரம் 1 தொடக்கம் 11 வரை அனைத்துப் பாடங்களுக்கும்)

සිංහල - https://bit.ly/3RvWsUm
தமிழ் - https://bit.ly/3egLbce
English - https://bit.ly/3q73Z07

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள்ஆடம்பர வாழ்வை அத்தியாவசியமான விருப்பம் என கருதி வாழ பழகிவிட்ட நாம் நம் வாழ்ந...
06/12/2023

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள்

ஆடம்பர வாழ்வை அத்தியாவசியமான விருப்பம் என கருதி வாழ பழகிவிட்ட நாம் நம் வாழ்நாளில் வீண்விரயமாகக் கூடிய பொருட்களோ, வளங்களோ,பணமோ எண்ணிலடங்காதவை. "ஏழைகளுக்கு இறங்குகின்றவன் கடவுளுக்கு கடன் கொடுத்து திரும்ப பெறுகிறான்" என்ற வாக்கிற்கிணங்க நாம் வீண் தேவைகளுக்காக விரயம் செய்யும் பணத்தை கற்றல் தேவைகளை நோக்கி எதிர்பார்த்து நிற்கும் சிறார்களுக்காக அர்ப்பணிப்போம். எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் நிகழ்ச்சி திட்டத்தில் கைகோர்ப்போம்

Bd / Barathi TMV, Badulla
11/06/2023

Bd / Barathi TMV, Badulla

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்        எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்...
11/06/2023

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்


எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் கற்றலுக்கான அடிப்படை பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில்,

பதுளை பிரதேசத்தில் பது/ மேமலை தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் 2023.05.12 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய மன்றத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்        எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்...
11/06/2023

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்


எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் கற்றலுக்கான அடிப்படை பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில்,

பதுளை பிரதேசத்தில் பது/ வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் 2023.05.12 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய மன்றத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்        எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்...
11/06/2023

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்


எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் கற்றலுக்கான அடிப்படை பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில்,

பதுளை பிரதேசத்தில் பது/ கோபோ தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் 2023.05.12 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய மன்றத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்        எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்...
11/06/2023

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டம்


எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் கற்றலுக்கான அடிப்படை பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில்,

பதுளை பிரதேசத்தில் பது/பாரதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் 2023.05.12 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய மன்றத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Badulla Road
Passara
90500

Alerts

Be the first to know and let us send you an email when Selundhthamizh Charitable Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selundhthamizh Charitable Foundation:

Share