JK Quality Homes

JK Quality Homes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JK Quality Homes, Engineering service, Perundural.

🏠 JK QUALITY HOMES – ERODE

உங்கள் கனவு வீட்டை
நம்பிக்கையுடன் கட்டுங்கள் ✅

🔹 IS Standard உறுதி
🔹 தரமான வேலைப்பாடு & Execution
🔹 Labour மட்டும் – ₹750 / சதுரஅடி
🔹 Material + Labour – ₹2100 / சதுரஅடி முதல்

சேவை பகுதிகள்
ஈரோடு & பெருந்துறை பகுதிகள்

📌 வீடு கட்ட திட்டமிடுபவர்கள் Approval செலவையும் கட்டுமான பட்ஜெட்டில் சேர்த்து திட்டமிடுவது நல்லது.📌 உங்கள் பகுதி எந்த Ca...
16/06/2026

📌 வீடு கட்ட திட்டமிடுபவர்கள் Approval செலவையும் கட்டுமான பட்ஜெட்டில் சேர்த்து திட்டமிடுவது நல்லது.

📌 உங்கள் பகுதி எந்த Category அல்லது Local Body-யில் வருகிறது என்பதை தெரிந்துகொண்டால், Approval Fee-யை முன்கூட்டியே கணக்கிட முடியும்.

குறிப்பு: அரசின் கட்டணங்கள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் காலத்திற்கேற்ப மாற்றப்படலாம். எனவே, சமீபத்திய தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

📞 JK QUALITY HOMES
📱 72991 23434





🏠 வீடு கட்டும் போது வீட்டை சுற்றி எத்தனை அடி இடம் விட வேண்டும் தெரியுமா?"என் இடம் சின்னது... ஒரு அடி கூட வீணாகக் கூடாது!...
15/06/2026

🏠 வீடு கட்டும் போது வீட்டை சுற்றி எத்தனை அடி இடம் விட வேண்டும் தெரியுமா?

"என் இடம் சின்னது... ஒரு அடி கூட வீணாகக் கூடாது!" என்று நினைத்து Setback இடத்தை குறைத்து வீடு கட்டினால் பின்னாளில் பெரிய சிக்கல்கள் வரலாம்.

⚠️ கட்டிட அனுமதி (Building Approval) பெறுவதில் பிரச்சினை

⚠️ வங்கி கடன் பெறுவதில் சிரமம்

⚠️ எதிர்காலத்தில் வீடு விற்பனை செய்யும்போது மதிப்பு குறைதல்

⚠️ மழைநீர் வடிகால் மற்றும் பராமரிப்பு சிக்கல்கள்

⚠️ அண்டை வீட்டாருடன் எல்லை தொடர்பான பிரச்சினைகள்

📌 வீட்டை சுற்றி விடப்படும் Setback என்பது வெறும் காலி இடம் அல்ல...

அது உங்கள் வீட்டின் சட்டப்பூர்வ பாதுகாப்பு!

ஒரு வீடு அழகாக இருப்பது மட்டும் போதாது;
அது விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும்.

✅ சரியான திட்டமிடல்
✅ கட்டிட அனுமதி வழிகாட்டுதல்
✅ தரமான கட்டுமானம்
✅ நம்பகமான ஒப்படைப்பு

🏡 JK QUALITY HOMES

📞 72991 23434

📍 Perundurai | Erode | Tiruchengode | Bhavani | Gobi

"உங்கள் கனவு வீடு... எங்கள் பொறுப்பு!"




















🏠 புதியதாக வீடு கட்டுகிறீர்களா?✔ உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் திட்டமிட்ட தரத்தில் உள்ளதா?✔ வீடு கட்டும்...
14/06/2026

🏠 புதியதாக வீடு கட்டுகிறீர்களா?

✔ உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் திட்டமிட்ட தரத்தில் உள்ளதா?

✔ வீடு கட்டும் போது செய்யும் சில தவறுகள், பின்னாளில் எளிதில் சரிசெய்ய முடியாது. அதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

✔ அனுபவமிக்க தொழில்நுட்ப ஆலோசனை பெற விரும்புகிறீர்களா?

━━━━━━━━━━━━━━━━

👷‍♂️ பொறியாளர் செல்வராசு M., B.E (Civil)

20 ஆண்டுகள் கட்டுமானத் துறை அனுபவம்

━━━━━━━━━━━━━━━━

JK QUALITY CONSULTANCY SERVICES

🏠 வீடு கட்டும் பயணத்தில்

✓ தொழில்நுட்ப ஆலோசனை

✓ கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு வழிகாட்டுதல்

✓ முக்கிய கட்டங்களில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய விளக்கம்

✓ தரமான வீடு உருவாக்குவதற்கான அனுபவப் பகிர்வு

━━━━━━━━━━━━━━━━

"வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல...

உங்கள் குடும்பத்தின் கனவு,

உங்கள் உழைப்பின் பலன்,

உங்கள் வாழ்க்கையின் முதலீடு."

━━━━━━━━━━━━━━━━

📍 பெருந்துறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

📱 WhatsApp: 72991 23434

━━━━━━━━━━━━━━━━

உங்கள் வீடு...
உங்கள் முதலீடு...
உங்கள் முடிவு...

🏠 புதியதாக வீடு கட்டுகிறீர்களா?வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு அல்ல...அது உங்கள் குடும்பத்தின் கனவு, உழைப்...
13/06/2026

🏠 புதியதாக வீடு கட்டுகிறீர்களா?

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு அல்ல...

அது உங்கள் குடும்பத்தின் கனவு, உழைப்பு, வாழ்க்கை முழுவதுமான சேமிப்பு.

ஆனால்...

❓ ஒப்பந்ததாரர் கூறும் மதிப்பீடு சரியானதா?
❓ பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா?
❓ தேவையற்ற செலவுகள் ஏற்படுகிறதா?
❓ கட்டுமானம் சரியான முறையில் நடைபெறுகிறதா?

இந்த சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும், நேர்மையாகவும் ஆலோசனை வழங்குகிறோம்.

JK QUALITY CONSULTANCY SERVICES
👷‍♂️ பொறியாளர் செல்வராசு M., B.E (Civil)

✅ 20 ஆண்டுகள் கட்டுமான துறை அனுபவம்
✅ கட்டுமான தர ஆய்வு
✅ கட்டம் வாரியான (Stage-wise) ஆய்வு
✅ பொருட்களின் தர ஆய்வு
✅ வீடு கட்டுமான ஆலோசனை
✅ கட்டுமான மேற்பார்வை
✅ வீடு கட்டும் முன் தொழில்நுட்ப வழிகாட்டுதல்

📍 பெருந்துறை மற்றும் சுற்றுப்புற 40 கி.மீ. பகுதிகளில் சேவை

📞 WhatsApp: 72991 23434

"ஒரு சிறிய ஆலோசனை இன்று... நாளைய பெரிய இழப்பை தவிர்க்க உதவும்!"

6 மாதங்களுக்கு முன்பு…ஒரு நண்பர் மூலம்1000 சதுரடியில் வீடு கட்ட quotation கேட்டார்கள்.1000 sft × ₹2000 = ₹20 லட்சம் (பில...
19/05/2026

6 மாதங்களுக்கு முன்பு…

ஒரு நண்பர் மூலம்
1000 சதுரடியில் வீடு கட்ட quotation கேட்டார்கள்.

1000 sft × ₹2000 = ₹20 லட்சம் (பில்லர் வீடு)

என்னென்ன வேலை செய்யப் போகிறோம்,
எந்த materials பயன்படுத்தப் போகிறோம்,
எப்படி செய்து முடிக்கப் போகிறோம்
என்று நேரில் சென்று தெளிவாக விளக்கி இருந்தோம்.

பிறகு phone செய்து,
“கருங்கல் அஸ்திவாரம் போட்டு
₹15 லட்சத்தில் கட்டித் தாருங்கள்” என்றார்.

நாங்கள் அதற்கு,
“அது உங்கள் பணம்…
உங்கள் விருப்பப்படி நீங்களே முயற்சி செய்து
₹15 லட்சத்தில் முடிக்க முடிந்தால்
உங்களுக்கு லாபம் தானே…”
என்று சொல்லிவிட்டோம்.

சில மாதங்கள் கழித்து…
பெருந்துறை பகுதியில்
ஒரு client காக site பார்க்க சென்ற போது,

அந்த நண்பரின் வீட்டருகே காலி மனை இருப்பதால்
அவரை சந்திக்க நேர்ந்தது.

அப்போது தான் தெரிந்தது…

அக்ரீமென்ட் போடாமல்,
அவரின் நண்பரிடம் வீடு கட்ட கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர்
🏠 வீட்டை பாதியிலேயே விட்டு சென்றுவிட்டார்.
இதுவரை ₹22 லட்சம் செலவாகி,
இன்னும் ₹3 லட்சம் வேலை பாக்கி இருப்பதாகவும் கூறினார்.

அதிலும் வேதனை என்னவென்றால்…
பாதியில் விட்டுச் சென்ற அதே நபர்,
அவரின் இன்னொரு நண்பரின் வீட்டையும் கட்டப் போகிறாராம்.

அதை தெரிந்தும் கூட,
“நான் ஏமாந்ததை சொன்னால்
நமக்கே அவமானம்…”
என்று அமைதியாக இருப்பதாக கூறினார்.

வீடு கட்டப் போகும் அந்த புதிய நபரும்
கடந்த வாரம் எங்களிடம் quotation கேட்டவர் தான்…

நண்பர்களுக்கு இடையிலேயே ஒளிவு மறைவாக இருக்கும் போது, மற்றவரின் தனிப்பட்ட அனுபவத்தை
நாமாக சென்று சொல்லவும் முடியாது.

வீடு கட்டும் போது
நட்பு, உறவு, வாய்வழி நம்பிக்கை மட்டும் போதாது.

📄 தெளிவான Agreement
📋 வேலை விவரம்
💰 பொருள் தரம்
⏳ காலக்கெடு
🔍 பொறுப்புகள்

இவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில்…

ஒரு கட்டத்தில்
வீட்டு உரிமையாளருக்கும்,
வேலை செய்பவர்களுக்கும்
மனஸ்தாபம் வருவது தவிர்க்க முடியாது.

அப்போது
நட்பும்… உறவும்…
அந்நியமாகி விடும்.

✅ தெளிவான Agreement மட்டுமே
இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

உங்கள் கருத்துகளை comment-ல் சொல்லுங்கள்.

📍 JK Quality Homes – Perundurai
📞 72991 23434

🏠 “Tiles போட்ட வீடு அழகாக இருக்கலாம்…”ஆனால் கம்பி & கான்கிரீட்டில் சமரசம் செய்யக்கூடாது!பளபளப்பான டைல்ஸ், பெயிண்ட், modu...
17/02/2026

🏠 “Tiles போட்ட வீடு அழகாக இருக்கலாம்…”

ஆனால் கம்பி & கான்கிரீட்டில் சமரசம் செய்யக்கூடாது!

பளபளப்பான டைல்ஸ், பெயிண்ட், modular cabinets — அவை எல்லாம் அழகு தரும்.

ஆனா… ⚠️ Structural strength சரியா இல்லைனா, அந்த அழகு 5–10 வருடம் கூட நிலைக்காது!

கட்டுமானத்தில் முதல் முன்னுரிமை — STRUCTURAL STRENGTH

இதை கண்டிப்பாக சரியா செய்ய வேண்டும்:

✔️ Proper material selection
(M20 / M25 grade concrete, Fe500 / Fe550 TMT bars)

✔️ Correct reinforcement detailing
(Bar diameter, spacing, lap length, hooks etc)

✔️ Proper concrete mix & curing
(Water-cement ratio control, proper vibration, minimum curing days)

✔️ Structural quality tests
(Seive analysis tests, Silt content, Cube test, Manufacturer's test Certificates)

இப்படி அடிப்படை 100% சரியா இருந்தா…

பிறகு finishing (tiles, counter, cabinets, painting) எப்ப வேண்டுமானாலும் upgrade செய்யலாம்.

ஆனா structure தப்பா இருந்தா?
❌ Crack வரும்
❌ Leak வரும்
❌ Repair செலவு அதிகம்
❌ Property value குறையும்

பளபளப்பை விட பாதுகாப்பே முக்கியம். 💪

அழகுக்கு முன் – பாதுகாப்பு.

JK Quality Homes
072991 23434

14/02/2026

🏠 சதுரடி ₹2000… ₹3000… எதுவாக இருந்தாலும்,

ஒவ்வொரு சதுரடியின் “தலைவிதி”யை தீர்மானிப்பது — கம்பியும் கான்கிரீட்டும் தான்.

வெறும் கண்களால் பார்த்து
“இது தரமானது” என்று சொல்ல முடியாது.

அப்படி நம்பினால்…
ஏமாற்றம் நிச்சயம்.

👉 உண்மை அறிய ஒரே வழி — LAB TEST மட்டுமே

✔ கான்கிரீட் Cube Test
✔ Steel Tensile Test
✔ Material Quality Verification

இதையெல்லாம் டெஸ்ட் செய்தால் தான்

அந்த கட்டிடத்தின் உண்மை முகம் தெரியும்.

✅ JK QUALITY HOMES பயன்படுத்தும் கம்பி & கான்கிரீட் —
இந்தியாவின் எந்த LAB-இலும் சோதித்து பார்க்கலாம்.

நாங்கள் தரம் பற்றி பேசவில்லை.
சோதிக்க கூடிய தரமான வீட்டை கட்டித் தருகிறோம்.

தரத்தை கண் முன்னால் உறுதி செய்து தரமாக வீடு கட்ட தயாரா?

இப்போதே அழையுங்கள்..

📍 JK QUALITY HOMES – Erode
📞 72991 23434
















05/02/2026

ரூம் அளவுகளை சரியாக சரிபார்க்காமல் கான்கிரீட் போடுவது,

பிளிந்து பீம் முடிந்த பிறகு
காலம் போஸ்ட் கம்பிகளை இஷ்டத்துக்கு வளைத்து
கான்கிரீட் போடுவது —

இவை எல்லாம் காலம் போஸ்ட் ஆடவும், structural weakness உருவாகவும் காரணமான பெரிய தவறுகள்.

சில கட்டுமானங்களில்,
பிளிந்து பீமுக்கு மேலே
காலம் போஸ்ட் alignment தவறிய நிலையில்

கிட்டத்தட்ட 3 இன்ச் வெளியே தொங்கிக் காணப்படுவது இன்னும் கவலையளிக்கும் விஷயம்.

👉 ரூஃப் slab போட்ட பிறகு
காலம் போஸ்ட் ஆடாமல் lock ஆகி விடலாம்

👉 ஆனால் அதனால் அது வலிமையானது ஆகாது

👉 Structural-ஆக அது weak element ஆகத்தான் இருக்கும்

இந்த மாதிரி தவறுகள்
வீட்டு உரிமையாளருக்கு மட்டும் அல்ல,

அந்த கட்டிடத்தைச் சுற்றி வாழும்
மற்றவர்களுக்கும் பாதுகாப்பு ஆபத்தாக மாறலாம்.

கம்பியும் கான்கிரீட்டும் வலிமையாக கட்டுவது
ஒரு தனி மனித பொறுப்பு மட்டும் அல்ல —

👉 சமூக பாதுகாப்பு
👉 பொது நன்மை
👉 எதிர்கால தலைமுறைகளுக்கான பொறுப்பும் கூட.

வீடு நமக்காக மட்டும் இல்லை.
அது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 🏠💪














03/02/2026

கான்கிரீட் வலிமை சரியாக இருக்கிறதா என்பதை
Concrete Cube Test மூலம் உறுதி செய்ய வேண்டும்.

சில நேரங்களில் cube strength குறைவாக வரும்.
அதற்கு காரணங்கள்:

1️⃣ Cube சரியாக cast / cure செய்யப்படாமல் இருக்கலாம்

2️⃣ உண்மையிலேயே கான்கிரீட் தரம் குறைவாக இருக்கலாம்

உண்மையான காரணம் தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட சோதனைகள் செய்ய வேண்டும் 👇

சோதனை முறைகள் (Step by Step):

1️⃣ Rebound Hammer Test (NDT)
– மேற்பரப்பு வலிமையை பார்க்கும் சோதனை
👉 இது fail ஆனால்,

2️⃣ Ultrasonic Pulse Velocity (UPV) Test
– கான்கிரீட்டுக்குள் crack / void இருக்கிறதா என பார்க்கும் சோதனை
UPV pass என்றால் → பிரச்சினை இல்லை
UPV fail என்றால் → அடுத்த சோதனை

3️⃣ Concrete Core Cutting & Testing
– கான்கிரீட்டின் உண்மையான வலிமையை உறுதி செய்யும் சோதனை

Core test pass என்றால் → கட்டிடம் பாதுகாப்பானது
Core test fail என்றால் → வலுப்படுத்தும் வேலை அவசியம்

Strength குறைவாக இருந்தால்:

Concrete Jacketing / Strengthening work செய்ய வேண்டும்

மிக மோசமான நிலையில் → அந்த structure-ஐ இடிக்க வேண்டும்

கம்பி, கான்கிரீட்டில் அலட்சியம் வேண்டாம்.

உயர்தர வீடுகள் கட்ட வேண்டுமானால் JK QUALITY HOMES-ஐ தொடர்பு கொள்ளவும்.

To ensure concrete strength, concrete cube testing must be done.

Sometimes cube results do not achieve the required strength.
Possible reasons are:

1️⃣ Improper cube casting or curing
2️⃣ Actual low-strength concrete

To identify the exact reason, the following tests are carried out.

Step-by-step testing procedure:

1️⃣ Rebound Hammer Test (NDT)
– Checks surface strength of concrete
If this test fails,

2️⃣ Ultrasonic Pulse Velocity (UPV) Test
– Checks internal quality and presence of cracks or voids

If UPV passes → No major issue
If UPV fails → Proceed to next test

3️⃣ Concrete Core Cutting & Testing
– Confirms actual in-situ concrete strength

If core test passes → Structure is safe
If core test fails → Strengthening is required

If concrete strength is inadequate:
Concrete jacketing / strengthening works

In worst cases, demolition of the structure.

Don’t compromise on steel and concrete.

To build quality homes, contact JK QUALITY HOMES.

Thanks

#

JK QUALITY HOMES பயன்படுத்தும்👉 கம்பி👉 கான்கிரீட்இவற்றின் எடை தாங்கும் திறனை,இந்தியாவின் எந்த LAB-இலும் TEST செய்து பார்...
01/02/2026

JK QUALITY HOMES பயன்படுத்தும்
👉 கம்பி
👉 கான்கிரீட்

இவற்றின் எடை தாங்கும் திறனை,
இந்தியாவின் எந்த LAB-இலும் TEST செய்து பார்க்கலாம்.

எங்கள் தரக் கட்டுப்பாடு பற்றி எங்களின் நம்பிக்கையின் சான்று இது.

அதனால் தான் வீடு
தலைமுறைகள் தாண்டியும்
நீடித்து நிலைத்து நிற்கும்.

🏗️ ஒவ்வொரு வீட்டிலும் அதன் தன்மையைப் பொறுத்து இருக்க வேண்டிய 5 முக்கிய Beam-கள்:

• Grade Beam – மண் மீது
• Plinth Beam – டைல்ஸ் மட்டத்தில்
• Sill Beam – ஜன்னல் கீழ் மட்டத்தில்
• Lintel Beam – ஜன்னல் மேல் மட்டத்தில்
• Roof Beam – ரூப் மட்டத்தில்
வீடாக இருந்தாலும்,

வணிக வளாகமாக இருந்தாலும்,
பெரிய பாலங்களாக இருந்தாலும்…

👉 தரத்தின் ஆணி வேர்
கம்பியும் கான்கிரீட்டும் தான்.

⚠️ ஒரு முக்கிய வேண்டுகோள்:

நீங்கள் யாரை வைத்தும்,
எப்போது வேண்டுமானாலும் வீடு கட்டுங்கள்.

ஆனால்

👉 INDIAN STANDARDS / ISI தரம்
👉 கம்பி & கான்கிரீட்

இதில்
எந்த சமரசமும் வேண்டாம்.

வீட்டு உரிமையாளராக நீங்கள்
செலவைக் குறைக்க நினைத்தால்,
👉 Tiles
👉 Paint

போன்ற அழகு வேலைகளில் கை வையுங்கள் – தவறில்லை.

பணம் சேர்ந்த பிறகு
இவற்றை மேம்படுத்த முடியும்.
ஆனால்…

கம்பி, கான்கிரீட் அளவுகளை
ஒருமுறை குறைத்து கட்டிவிட்டால்,
பின்னால் எவ்வளவு பணம் இருந்தாலும்
திருத்த முடியாது.

👉 ஆகவே,

வீடு கட்டும் போது அலட்சியம் வேண்டாம்.

JK QUALITY HOMES – Erode
📞 72991 23434

















Address

Perundural
638052

Alerts

Be the first to know and let us send you an email when JK Quality Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share