Kʟᴇỉтoᴎⱬ

Kʟᴇỉтoᴎⱬ "Kleitonz"...!..!.!!

this is the name which we have chosen for our batch (2010-2014) In this Prestigious "Alagappa Chettiar College Of Engineering & Technology" in Karaikudi.

03/06/2019

ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் அடி மனசுல ஆசைய தூண்டனும்
----------------------------------
அன்புள்ள முன்னாள் இந்நாள் Accet கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

கல்லூரி காலங்களில் 7500 பணம் கட்டுவதன் மூலமாக உறுப்பினராகி அதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம். அதற்ற்கு நீங்கள் அதே போல் 7500 பணம் கட்டக்கூடிய ஆட்களை அதில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது போன்ற நூதன மோசடிகளை செய்து வந்ததது நாம் அறிந்ததே

அதே போன்று மோசடி தற்போது நவீன சூழலுக்கு ஏற்ப விரிவடைந்துள்ளது நமது கல்லூரியை சேர்ந்த சிலர் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர் ஆனால் இந்த முறை நீங்கள் ஏமாற போவது சில லட்சங்கள்

உங்களுக்கு இந்த மாதிரியான அணுகுமுறைகள் யாரிடமாவது வந்தால் முற்றும் முழுதாக நிராகரியுங்கள்

1.முதலில் அந்த நபர்கள் உங்களை முகப்புத்தகத்தின் வாயிலாக உங்களை அணுகுவார்கள் ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் கல்லூரி காலங்களில் எந்த சம்பந்தமும் இருக்காது
2.தங்களை வளர்ச்சி பெற்ற தொழில் முனைவோர்களாக சித்திரித்து காமிப்பார்கள் தாங்கள் செல்வ செழிப்பாய் வாழ்வதை போன்ற பிரமை கட்டி எழுப்புவார்கள்

3.பெரிய ஹோட்டல்களில் பார்ட்டி இருப்பதை போல சித்தரிப்பார்கள் ஆனால் அவர்களை தவிர யாரும் உடன் இருக்க மாட்டர்கள்

4.அயல்நாடுகளுக்கு சொந்த செலவுல சென்று தாங்கள் இந்த தொழிலால் வளர்ந்ததாக காமித்து கொள்வார்கள்

5.கடைசி வரை என்ன தொழில் என்று சொல்ல மாட்டார்கள் உங்கள் வேலையின் மீதான பிடிப்பை வலுவிழக்க செய்வார்கள்

6.உங்களை பற்றி அக்கறையான வார்த்தைகளை கூறி உங்களை முழுவதும் அறிந்து கொள்வார்கள்

கடைசியில் இதில் சேர சில லட்சங்கள் முதலீடு என்ற பெயரில் கேப்பார்கள்

7.உங்களிடம் பணம் இல்லையென்று சொன்னாலும் லோன் வாங்கி தருவதாகவும் இது முதலீடு உங்கலுக்கு பணம் பல்கி பெருகுமென உங்களை மூளை சலவை செய்வார்கள்

இந்த மாதிரியான செயல்களில் நமது முன்னாள் கல்லூரி பெண்களும் அடக்கம்

உஷார் உஷார்

Address

Karaikudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kʟᴇỉтoᴎⱬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share