27/09/2025
ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் புதிய உற்பத்தி பொருளான HARD WORKER ECO PLASTER ( Zero Water Curing Plaster) என்ற பொருளை விளம்பரப்படுத்தும் நோக்கில் 50 நொடி விளம்பரமொன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இதில் கட்டிட பொறியாளர் அல்லது கட்டிட ஒப்பந்ததாரர் தண்ணீரை வீணாக்குவதால் பெண்கள் அவர்களை அடிப்பது போன்று கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர்கள் மீதான வன்மத்தோடு அவ்விளம்பரமானது தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களது ராம்கோ தயாரிப்புகளை பல வருடங்களாக பயன்படுத்தி வரும் அனைத்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களையும் மிகுந்த மன வருத்தமடைய செய்யும் இந்த விளம்பரத்தை உடனடியாக அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களிலிருந்தும் நீக்க வேண்டும். மேலும், அனைத்து நிலை கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் அவ்விளம்பர நிறுவனமும், ராம்கோ நிறுவனமும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களால் தான் தங்கள் நிறுவனம் வளர்ந்ததே தவிர. மற்றவர்களால் இல்லை, என்பதனை ராம்கோ நிறுவனம் உணர வேண்டும். எனவே இதனை கட்டிட கலைஞர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் - தமிழ்நாடு வன்மையாக கண்டிப்பதோடு, தவறும் பட்சத்தில் இனி எங்கள் சங்கம் சார்ந்த பொறியாளர்கள் ராம்கோ தயாரிப்புகளை புறக்கணிப்பதோடு, இந்நிகழ்வை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் செய்ய நேரிடும் என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
*MJF Lion Er.K.கலையரசன்*
*நிறுவனர் & மாநிலத்தலைவர்*
*AACE -TAMILNADU*